விழுப்புரத்தில் லாரி மோதிய விபத்தில் பலியான 2 பேரின் அடையாளம் தெரிந்தது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்


விழுப்புரத்தில் லாரி மோதிய விபத்தில் பலியான 2 பேரின் அடையாளம் தெரிந்தது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 30 Jan 2017 10:30 PM GMT (Updated: 30 Jan 2017 5:10 PM GMT)

விழுப்புரத்தில் லாரி மோதிய விபத்தில் பலியான 2 பேரின் அடையாளம் தெரிந்தது. நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்

விழுப்புரம்,

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை வெங்காயமூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சிக்கு புறப்பட்டது. அந்த லாரி இரவு விழுப்புரத்தில் உள்ள செஞ்சி புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது, விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரம் பலியாகினர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் பலியான நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் விபத்தில் பலியான இருவரின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது. அவர்கள் செஞ்சி அருகே சங்கீதமங்கலத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 45), ராஜேந்திரன் (45) என்பதும், இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் நடந்த நண்பர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் சங்கீதமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர்கேட் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story