குமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


குமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 30 Jan 2017 10:51 PM GMT (Updated: 2017-01-31T04:21:52+05:30)

குமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கோட்டார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சரவணகுமார் கோட்டாருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதுபோல் மார்த்தாண்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மணவாளக்குறிச்சிக்கும், மணவாளக்குறிச்சியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முத்துராமன் குளச்சலுக்கும், குளச்சலில் பணியாற்றி இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை மார்த்தாண்டத்துக்கும் மாற்றப்பட்டனர்.

இதற்கான உத்தரவை மதுரை மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. ஆனந்தகுமார்சோமன் பிறப்பித்தார்.


Next Story