போளூர் அருகே எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு கூட்டம்


போளூர் அருகே எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2017 8:45 PM GMT (Updated: 2017-02-18T19:39:14+05:30)

புத்திராம்பட்டு கிராமத்தில் எரிபொருள் சிக்கன மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

போளூர்,

போளூரை அடுத்த புதுப்பாளையம் அருகேயுள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் தனியார் கியாஸ் ஏஜென்சி சார்பில் எரிபொருள் சிக்கன மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் மண்டல மேலாளர் கீதா கலந்து கொண்டு, கியாசை எவ்வாறு பாதுகாப்பாக மற்றும் சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து கியாசை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தனியார் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கவிதா, மேலாளர் ரமணி சத்தியன் மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story