நிலதரகர்கள் மறியல்; 30 பேர் கைது


நிலதரகர்கள் மறியல்; 30 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T00:25:54+05:30)

நிலதரகர்கள் மறியல்; 30 பேர் கைது

கோவில்பட்டி,

விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் ஏற்கனவே வாங்கிய வீட்டுமனைகளையும், புதிதாக கட்டப்பட்ட வீடுகளையும் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறி, கோவில்பட்டி வட்டார நில தரகர்கள் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் முத்துகிருஷ்ணன், துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் காளிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 30 பேரை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.


Next Story