மாவட்டத்தில் 77,641 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை வழங்கும் பணி அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்


மாவட்டத்தில் 77,641 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை வழங்கும் பணி அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 March 2017 11:15 PM GMT (Updated: 7 March 2017 6:32 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 77,641 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகை வழங்கும் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர்,

வறட்சி நிவாரணம் வழங்கும் பணி

கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 77 ஆயிரத்து 641 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.66.16 கோடி வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு, 100 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகைக்கான ஆணைகளை வழங்கி பேசியதாவது:–

கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவு வறட்சி தமிழகத்தை தழுவியுள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்து 32 லட்சத்து 31 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 247 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஒரு வாரத்தில்...

கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் 1 லட்சத்து 41 ஆயிரத்து 624 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டு 77 ஆயிரத்து 641 விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ.66.16 கோடி வழங்கப்பட உள்ளது.

இன்றைய தினம் இப்பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் 77 ஆயிரத்து 641 விவசாயிகளுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் வறட்சி நிவாரணத்தொகை செலுத்தப்பட்டு விடும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

விழாவில் சப்–கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், கோட்டாட்சியர்கள் விஜயலட்சுமி, கிருபானந்தம், துணை கலெக்டர் உமாமகேஷ்வரி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ரவிச்சந்திரன், கடலூர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பெருமாள் ராஜா, வேளாண்மை இணைஇயக்குனர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story