எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 24,877 மாணவ-மாணவிகள் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 24,877 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-09T02:40:19+05:30)

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 24,877 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். மேலும் 305 பேர் தேர்வு எழுத வரவில்லை.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று காலை தொடங்கியது. இந்த தேர்வை எழுத புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,497 மாணவர்களும், 12,685 மாணவிகளும் என மொத்தம் 25,182 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 12,300 மாணவர் களும், 12,577 மாணவிகளும் என மொத்தம் 24,877 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 305 மாணவ, மாணவிகள் தேர்விற்கு வரவில்லை. இதில் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டு கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார்.

திடீர் சோதனை

தேர்வு மையத்தில் முறை கேடுகளை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு திடீர் சோதனை மேற்்கொள்ளப்பட்டது. முன்னதாக காலையிலேயே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து கடைசியாக ஒருமுறை படித்த பாடங்களை நினைவு படுத்தி கொண்டனர். தேர்வு எழுத சென்ற தங்களது மாணவ-மாணவிகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் பரிசளித்தனர். மேலும் மாணவர்களும் தங்கள் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். இன்று (வியாழக்கிழமை) தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளது. 

Next Story