அழைப்பு உங்களுக்குத்தான்


அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 20 March 2017 9:44 AM GMT (Updated: 2017-03-20T15:14:04+05:30)

யூ.பி.எஸ்.சி. பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள அசிஸ்டன்ட் என்ஜினீயர் மற்றும் ஜூனியர் டெக்னிக்கல் அனலிஸ்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.

வங்கி: இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி சுருக்கமாக ‘எக்சிம் பேங்க்’ என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. டெபுடி மேனேஜர், மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்று, பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிகளுக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள் https://www.eximbankindia.in/careers என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15–4–2017–ந் தேதி.

யூ.பி.எஸ்.சி. : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள அசிஸ்டன்ட் என்ஜினீயர் மற்றும் ஜூனியர் டெக்னிக்கல் அனலிஸ்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள், 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணிக்கும், முதுநிலை அறிவியல், கணினி, புள்ளியியல், பொறியியல், தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 30–3–2017–ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விரிவான விவரங்களை அறிந்து கொள்ள பார்க்க வேண்டிய இணையதள முகவரி :
www.upsc.gov.in.


வேதி ஆய்வகம் : தேசிய வேதியியல் ஆய்வகம் சுருக்கமாக என்.சி.எல். எனப்படுகிறது. சி.எஸ்.ஐ.ஆர். அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் புனேயில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணிக்கு 15 பேரும், முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆராய்ச்சியாளர் பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வேதியியல் மற்றும் அது சார்ந்த அறிவியல், பொறியியல் முனைவர் பட்டங்கள் பெற்றவர் களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 10–4–2017–ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப்பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 3–5–2017–ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
www.nclindia.org
என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

கப்பல் தளம் : பொதுத்துறை கப்பல் நிறுவனங்களில் ஒன்று கோவா சிப்யார்டு. தற்போது இந்த நிறுவனத்தில் பொது மேலாளர், துணை பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கு 28 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எச்.ஆர்., நிதி, டெக்னிக்கல், செகரட்ரி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், லீகல் என பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.  எம்.பி.ஏ., எம்.எஸ்.டபுள்யு., பி.இ., பி.டெக்,, முதுநிலை இதழியல், மாஸ் கம்யூனிகேசன், மீடியா அட்வடைசிங், பப்ளிசிட்டி உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு பணி உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பம் 5–4–2017–ந் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.goashipyard.co என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Next Story