மணலி விரைவு சாலையில் ரசயான புகை மூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்


மணலி விரைவு சாலையில் ரசயான புகை மூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 21 March 2017 3:30 AM IST (Updated: 21 March 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

மணலி விரைவு சாலையில் எம்.எப்.எல் ரவுண்டானா அருகே நேற்று மதியம் 2 மணியளவில் புகைமூட்டமாக காணப்பட்டது.

திருவொற்றியூர்,

திடீரென ஏற்பட்ட புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர். கனரக வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் அந்த புகையை சுவாசித்தவர்களுக்கு மூச்சு திணறலும், லேசான கண் எரிச்சலும் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த புகைமண்டலம், காற்று வேகமாக வீசியதால் மறையத்தொடங்கியது. பின்னர் நிலமை சீரானதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் வழக்கமான வேகத்தில் வண்டிகளை ஓட்டி சென்றனர்.

இது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்தபோது அது சாலையோரம் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன புகை என்றும், தரைக்காற்று வீசியதால் அந்த பகுதியில் சூழ்ந்து இருந்ததும் தெரியவந்தது.


Next Story