பிரம்மதேசம் அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர், 3 லாரிகள் பறிமுதல்


பிரம்மதேசம் அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர், 3 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2017 8:30 PM GMT (Updated: 30 March 2017 12:58 PM GMT)

பிரம்மதேசம் பாலாற்றில் இருந்து லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக வெம்பாக்கம் தாசில்தாருக்கு புகார்கள் சென்றன.

வெம்பாக்கம்,

பிரம்மதேசம் பாலாற்றில் இருந்து நள்ளிரவு மற்றும் அதிகாலையில் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக வெம்பாக்கம் தாசில்தாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள் தலைமையில், மண்டல துணை தாசில்தார் ஜெயவேல் மற்றும் வருவாய் துறையினர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரம்மதேசம் புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகள், டிராக்டர், பொக்லைன் ஆகியவற்றை நிறுத்தி வருவாய் துறையினர் சோதனையிட முயன்றனர். வருவாய் துறையினரை கண்டதும் 3 லாரிகள், டிராக்டர், பொக்லைன் டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் துறையினர் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது 3 லாரிகள், டிராக்டரில் பிரம்மதேசம் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும், மணல் அள்ள பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தியதும், 3 லாரிகள், டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவை வாலாஜாவை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமானது எனவும் தெரியவந்தது.

இதையடுத்து தாசில்தார் பெருமாள் 3 லாரிகள், டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story