தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2–வது மின்உற்பத்தி எந்திரம் பழுது

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2–வது மின்உற்பத்தி எந்திரம் பழுது
x
தினத்தந்தி 30 March 2017 9:15 PM GMT (Updated: 2017-03-30T20:29:30+05:30)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2–வது மின் உற்பத்தி எந்திரம் பழுதடைந்ததால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2–வது மின் உற்பத்தி எந்திரம் பழுதடைந்ததால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

2–வது எந்திரம் பழுது

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 எந்திரங்கள் இயங்கி வருகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் மின் உற்பத்தியின் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களாக 5 மின்உற்பத்தி எந்திரங்களும் இயக்கப்பட்டு முழுவீச்சில் மின்சார உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 2–வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலன் குழாயில் நேற்று திடீரென துவாரம் விழுந்து பழுது ஏற்பட்டது. இதனால் 2–வது எந்திரத்தில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பழுது

உடனடியாக அனல்மின் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து பழுது நீக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

2–வது எந்திரம் பழுதடைந்ததால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story