அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் திருட்டு


அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-30T21:56:01+05:30)

அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் காலனியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி(வயது58).

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் காலனியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி(வயது58). இவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று காலை அதேபகுதியில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது மர்மமனிதன் பூட்டை உடைத்து வீட்டினுள் புகுந்து அலமாரியில் இருந்த ரூ.3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். அவர் அதே இடத்தில் புடவையினுள் மறைத்து 8 பவுன் நகையை வைத்திருந்தார். அது திருடனின் கண்ணில் படாததால் தப்பியது. ராஜேஸ்வரியின் புகாரை தொடர்ந்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story