விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு– புற ஊதாக்கதிர் சிகிச்சை கருவிகள் கலெக்டர் இயக்கி வைத்தார்


விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு– புற ஊதாக்கதிர் சிகிச்சை கருவிகள் கலெக்டர் இயக்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-30T23:52:40+05:30)

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மற்றும் புற ஊதாக்கதிர்

விக்கிரவாண்டி,

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிறுநீரகம் பழுதடைந்த நோயாளிகளுக்காக ரூ.21 லட்சம் செலவில் கூடுதலாக 5 ரத்த சுத்திகரிப்பு கருவிகள், தோல் வியாதியை குணப்படுத்தும் வகையில் ரூ.4 லட்சம் செலவில் புற ஊதாக்கதிர் சிகிச்சை கருவிகள் மாவட்ட தன்னிறைவு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை நேற்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் இயக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

ஏற்கனவே இந்த மருத்துவமனையில் 4 ரத்த சுத்திகரிப்பு கருவிகள் உள்ளது. தற்போது கூடுதலாக 5 கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மூலம் ஒரே நேரத்தில் 9 பேருக்கு ரத்தம் சுத்திகரிப்பு செய்ய முடியும்.

அதேபோல் புற ஊதாக்கதிர் சிகிச்சை கருவி மூலம் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியை குறிப்பாக கிராமப்புற மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வசந்தாமணி, துணை முதல்வர் பூங்குழலிகோபிநாத், கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நிலைய டாக்டர்கள் மணிவண்ணன், சாதிக்பாஷா, தோல் மருத்துவத்துறை தலைவர் தாரணி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story