மது பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி


மது பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 30 March 2017 9:45 PM GMT (Updated: 2017-03-31T01:27:12+05:30)

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மது பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவ–மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மது பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவ–மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கலால் உதவி ஆணையர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100–க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு மது பழக்கத்தை கைவிட வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பியவாறு முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்றனர்.

 இந்த பேரணியில் மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர்கள் ராம்சுந்தர், ஜெயக்குமார்,  திருவள்ளூர் தாலுகா சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story