கிராமப்புற குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி அமைச்சர் நேரில் ஆய்வு


கிராமப்புற குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி அமைச்சர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 2 April 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராமப்புற குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராமப்புற குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார். குளங்களை தூர்வாரி சீரமைக்கும் பணி பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில், தயார் படுத்திக்கொள்ளுதல் திட்டத்தின் கீழ் புதுச்சேரி பகுதியில் உள்ள 32 கிராம குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.1.71 கோடியை முதல் தவணையாக வழங்கியுள்ளது.

 இதன் முதல் கட்டமாக ஏம்பலம் கிராமத்தில் இத்திட்டத்தை அமைச்சர் கந்தசாமி நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.இத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராமக்குளங்களும் தூர் வாரப்பட்டு, நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டினை கருத்தில் கொண்டு மீதமுள்ள அனைத்து கிராமக்குளங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

 நிகழ்ச்சியில், வேளாண்துறை இயக்குனர் ராமமூர்த்தி, வேளாண் பொறியியல் இணை இயக்குனர் சோமலிங்கம், புதுவை மாநில நிலத்தடி நீர் மற்றும் மண்வள பாதுகாப்பு பிரிவு வேளாண் பொறியியல் துணை இயக்குனர்கள் சேகர், ஆனந்தன், வேளாண் பொறியியல் அதிகாரிகள் ஜெயக்குமார், ரகுமான், பாசிக் நிறுவன பொறியாளர்கள் ஏம்பலம் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story