கோவில் விழாவுக்கு வரி கொடுக்காததால் குடிநீர் குழாய்கள் உடைப்பு: சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆஸ்பத்திரி ஊழியர் தீக்குளிக்க முயற்சி


கோவில் விழாவுக்கு வரி கொடுக்காததால் குடிநீர் குழாய்கள் உடைப்பு: சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆஸ்பத்திரி ஊழியர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-06T22:18:42+05:30)

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தொட்டம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 28).

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தொட்டம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 28). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். ராமு நேற்று காலை தனது மனைவி சுமதி மற்றும் அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் உள்ளிட்ட 12 பேருடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ராமு தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் உடனே ராமுவை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

ராமு வசித்து வந்த ஊரில் கோவில் திருவிழாவுக்கு ரூ.2 ஆயிரம் வரி கொடுக்க மறுத்ததால் சிலர் ராமுவின் வீட்டு முன்பு இருந்த குடிநீர் குழாய்களை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து தீக்குளிக்க முயற்சி செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ராமு மற்றும் அவருடன் வந்தவர்கள் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


Next Story