தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்திற்கு விவசாய சங்கத்தினர் ஆறுதல்


தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்திற்கு விவசாய சங்கத்தினர் ஆறுதல்
x
தினத்தந்தி 6 April 2017 8:52 PM GMT (Updated: 2017-04-07T02:21:42+05:30)

தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்திற்கு விவசாய சங்கத்தினர் ஆறுதல்

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவி கிராமத்தில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி சிற்றரசுவின் குடும்பத்தினரை நேற்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர் கூறுகையில், ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அழைத்து பேச முன்வரவில்லை. தமிழக அரசு மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று, விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை அறிவித்து இருக்க வேண்டும்’ என்றார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பாண்டியன், நரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story