சுழலும் பெண் சூறாவளி


சுழலும் பெண் சூறாவளி
x
தினத்தந்தி 7 April 2017 10:19 AM GMT (Updated: 7 April 2017 10:18 AM GMT)

கிளாராவை நியூசிலாந்து அரசாங்கம் மீட்பு பணி அதிகாரியாகவே பணி அமர்த்தியிருக்கிறது. இவரது தலைமையில் 10 மீட்பு வீரர்கள் செயல்பட்டாலும், சூறாவளி என்றால் கிளாராவே களம் இறங்குகிறார்.

நியூசிலாந்தைச் சேர்ந்த கிளாராவிற்கு சூறாவளிகளுடன் விளையாடுவதே வேலை. பேய் காற்று வீசிக்கொண்டிருக்கும் சூறாவளிக்குள், ஹெலிகாப்டரை ஓட்டிச் செல்வதும், கடல் அலைகளில் சிக்கி உயிருக்கு போராடும் மீனவர்களைக் காப்பாற்றுவதுமே இவரது வேலை. இதனால் கிளாராவை நியூசிலாந்து அரசாங்கம் மீட்பு பணி அதிகாரியாகவே பணி அமர்த்தியிருக்கிறது. இவரது தலைமையில் 10 மீட்பு வீரர்கள் செயல்பட்டாலும், சூறாவளி என்றால் கிளாராவே களம் இறங்குகிறார்.

‘என்னுடைய அப்பா தொழில் அதிபர். நடுக்கடலில் குடும்பத்தினருடன் படகில் பொழுதை கழித்தபோது, சூறாவளியால் சூழப்பட்டோம். என்னைத் தவிர குடும்பமே சின்னாபின்னமானது. அன்றைய தினத்தில் எங்களுக்கு கிடைக்காத உதவியை இன்று நான் வழங்கி வருகிறேன். சூறாவளியை நேருக்கு நேராக பார்த்திருப்பதால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள சுலபமாக இருக்கிறது. இதுவரை 50–க்கும் மேற்பட்ட சூறாவளிகளில் மீட்புப் பணியை செய்திருக்கிறேன்’ என்று கூறும் கிளாரா, ஆக்ரோ‌ஷமான சூறாவளியின் மைய புள்ளிக்குள் உள்நுழையும் தொழில்நுட்பத்தை ஹெலிகாப்டரில் இணைத்திருக்
கிறார். வெகுவிரைவில் செயல்பட இருக்கும் இந்த தொழில்நுட்பம் மீட்பு பணியை சுலபமாக்கிவிடும் என்பது கிளாராவின் நம்பிக்கை.

Next Story