வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்


வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 April 2017 6:35 PM GMT (Updated: 7 April 2017 6:35 PM GMT)

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்

மன்னார்குடி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மன்னார்குடி ஒன்றியக்குழுவின் சார்பில் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளான விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், மாணவர், இளைஞர் பெருமன்றத்தின் கிளை செயலாளர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.முனியாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் கட்சியின் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் கோ.தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.நாகேஷ், மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.ராஜாங்கம், ஒன்றிய செயலாளர் என்.மகேந்திரன், மாணவர் மன்ற ஒன்றிய செயலாளர் எஸ்.பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–

தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரண அறிவிப்பை மறுபரிசீலனை செய்து விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரியுள்ள நிதியை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story