பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உண்ணாவிரதம்


பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 May 2017 9:30 PM GMT (Updated: 3 May 2017 12:23 PM GMT)

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நெல்லை,

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

டாக்டர்கள் உண்ணாவிரதம்

மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த 18–ந் தேதி முதல் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டம் நேற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. அங்கு சாமியானா பந்தல் அமைத்து டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்துக்கு டாக்டர்கள் சங்க தலைவர் அபுல்காசிம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெஸ்லின், பொருளாளர் செந்தில் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர்கள் போராட்டத்தால் ஆஸ்பத்திரியில் நேற்று முக்கிய அறுவை சிகிச்சைகள் தவிர, மற்ற அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறவில்லை. பயிற்சி டாக்டர்கள் வார்டுகளுக்கு வராததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. புறநோயாளிகளுக்கான சிகிச்சையும் நடைபெறவில்லை. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

டீன் பேட்டி

இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் சித்தி அத்திய முனவரா கூறுகையில், “தற்போது டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கான சிகிச்சையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முக்கிய அறுவை சிகிச்சை எல்லாம் நடந்து வருகிறது. ஆஸ்பத்திரியில் நடைபெறும் பணிகள் குறித்து அனைத்து துறைகளின் தலைவர்களும் என்னிடம் தகவல்களை தொடர்ந்து தெரிவித்து உள்ளனர்“ என்றார்.

Next Story