திமிரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


திமிரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 May 2017 11:38 PM GMT (Updated: 3 May 2017 11:37 PM GMT)

திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆற்காடு,

திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவறைகள் பார்வையிட்டு, ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் வீடுகளில் கட்டப்பட்டுள்ள, கட்ட உள்ள கழிப்பறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம சேவை மையத்தினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் திமிரியை அடுத்த மோசூரில் இருந்து காந்திநகர் வரை செல்லும் சாலையில் ரூ.34 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவருடன் அமைக்கப்படும் சாலை பணியை பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

அதேபோல் பழையனூரில் ரூ.16 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும் தார்சாலையை பார்வையிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெரியசாமி, செயற்பொறியாளர் செந்தில், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, அஞ்சலி ஆகியோர் உடன் இருந்தனர்.



Next Story