திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2017 10:00 PM GMT (Updated: 2017-05-31T01:32:40+05:30)

திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழுத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் மாணிக்கம், வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லல் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளர் முருகேசன், எஸ்.புதூர் ஒன்றியச் செயலாளர் சேதுராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாந்தி, குருசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது, வருவாய்த்துறை நிர்வாகத்தினர் சாத்தனூர் கிராமத்தில் 10 ஏழை குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். கீழபட்டமங்கலம், சளிப்புளி கண்மாய் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். என்.கீழையூர் தெற்கு நடுவிக்கோட்டையில் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தனர். இக்கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படவில்லை எனில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.


Next Story