வண்ணம் மாறும் மக்காச்சோளம்


வண்ணம் மாறும் மக்காச்சோளம்
x
தினத்தந்தி 31 May 2017 6:35 AM GMT (Updated: 2017-05-31T12:05:49+05:30)

உணவுப் பண்டங்களில் வண்ணச் சாயங்கள் சேர்க்கப்படுவது தீமையானது என்ற பொதுவான எண்ணம் மக்களிடம் உள்ளது.

ணவுப் பண்டங்களில் வண்ணச் சாயங்கள் சேர்க்கப்படுவது தீமையானது என்ற பொதுவான எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனாலும் இயற்கைச் சாயங்கள் பலவும், செயற்கைச் சாயங்கள் சிலவும் உணவுப் பொருட்களில் கலக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதே. அமெரிக்காவில் தற்போது மக்காச்சோளத்தை நிறம் மாற்றி விளைய வைக்கும் முயற்சி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மரபியலாளர் ஜேக் ஜூவிக், தனியார் உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்றிற்காக மக்காச்சோளத்தை நிறம் மாற்றி விளைய வைத்து வருகிறார். மஞ்சள் நிறத்தில் பொன்மயமாக மின்னும் மக்காச்சோளங்கள், இப்போது நீல நிறத்திலும், ஊதா நிறத்திலும் மாறி கவனம் இருக்கிறது. “திராட்சை, கேரட், பீட்ரூட் போன்றவற்றில் இருந்து இயற்கை சாயங்களை பெற்று தேவைக்கேற்ப உணவுப்பண்டங்களில் சேர்க்கப்படுகிறது. நாங்கள் திராட்சை நிறமியில் இருந்து இதற்கான வண்ணம் எடுத்து மக்காச்சோளத்தை இப்படி மாற்றி உள்ளோம்” என்கிறார் ஜூவிக்.

“தாவரங்களில் காணப்படும் நிறமிகளே சுவையை வழங்குகின்றன. ஈர்ப்பு சக்தியாகவும், எதிர்ப்புசக்தியாகவும் நிறமிகளே இருக்கின்றன. மக்காச்சோளத்தின் சுவையையும், எதிர்ப்புசக்தியையும் அதிகரித்து, மகசூலை பெருக்குவதற்காக இந்த மரபணு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது” என்கிறார் அவர்.

பெரு நாட்டில் அதிக மகசூல் தரக்கூடிய மக்காச்சோள இனத்தை இப்படி ஹைபிரிட் முறையில், புதிய வண்ணத்தில் உற்பத்தி செய்து வருகிறார்கள். புதிய வண்ணத்தில் வரும் மக்காச்சோளம், விமர்சனங்களைக் கடந்து விற்பனைக்கு வர இன்னும் சில காலம் பிடிக்கும். 

Next Story