மணல் கடத்தல்; 4 லாரிகள் பறிமுதல்


மணல் கடத்தல்; 4 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 2017-06-21T23:34:25+05:30)

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் மணல் கடத்தி வந்த 4 லாரிகளை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் நேற்று முன்தினம்  இரவு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து  மணல் கடத்தி வந்த 4 லாரிகளை போலீசார் மடக்கிப்பிடித்தனர். டிரைவர்கள் லாரியை விட்டு விட்டு கீழே இறங்கி தப்பிச்சென்று விட்டனர். மணலுடன் 4 லாரிகளையும் போலீசார்  பறிமுதல் செய்தனர்.  

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர். 

Next Story