பள்ளியில் யோகா தினம்


பள்ளியில் யோகா தினம்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-22T00:26:33+05:30)

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஏராளமான மாணவ-மாணவிகள் யோகாசன பயிற்சி செய்தனர்.

வண்டலூர், 

வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஏராளமான மாணவ-மாணவிகள் யோகாசன பயிற்சி செய்தனர். இதில் பள்ளி முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல நந்திவரம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தின் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் எச்.ஐ.வி., டி.பி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா வகுப்புகள் நடந்தது. இதில் செங்கல்பட்டு துணை இயக்குனர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் சுகன்யா, தீபா, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story