வியப்பூட்டும் ‘விண்வெளி தேசம்’!


வியப்பூட்டும் ‘விண்வெளி தேசம்’!
x
தினத்தந்தி 8 July 2017 7:58 AM GMT (Updated: 2017-07-08T14:07:34+05:30)

ரஷிய ராக்கெட் விஞ்ஞானி இகோர் அஷுர்பெய்லியின் யோசனையில், ஒரு வியப்பூட்டும் விண்வெளி தேசம் உருவாகப் போகிறது.

இந்த விண்வெளி நாடு, பூமியில் உள்ள எந்த நாட்டுக்கும் கட்டுப்படாத சுதந்திர தேசமாக இருக்கும். வருகிற செப்டம்பர் மாதம் ஏவப்படப் போகிற ‘அஸ்கார்டியா-1’ செயற்கைக்கோள் மூலம், இந்த விண்வெளி நாட்டுக்கான முதல் அடி எடுத்துவைக்கப்படுகிறது.

பூமியில் இருந்து குறைந்த தூர சுற்றுவட்டப் பாதையில், அதாவது 160 முதல் 320 கி.மீ. தொலைவில் இந்த விண்வெளி நாடு அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்போதைக்கு, 217 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் இந்த விண்வெளி தேசத்தில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.

விண்வெளி தேச ஆர்வலர்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஆங்கில மொழி பேசுபவர்கள். ஆனால் தனி நாடு என்று பார்த்தால், சீனாவில் இருந்து விண்ணப்பித்தவர்களே அதிகம். அதாவது 28 ஆயிரம் பேர்.

சுமார் 8 ஆண்டுகளில் இந்த விண்வெளி நாட்டில் மனிதர்கள் குடியேற முடியுமாம்.

Next Story