குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்


குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 July 2017 10:00 PM GMT (Updated: 2017-07-23T02:40:39+05:30)

குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சிக்குட்பட்ட களரம்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ராசிபுரம் அருகேயுள்ள காட்டூர் ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பேரில் பெண்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story