பெரம்பலூரில் 31 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த முடிவு


பெரம்பலூரில் 31 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த முடிவு
x
தினத்தந்தி 8 Aug 2017 3:45 AM IST (Updated: 8 Aug 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் 31 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்திவிழா கமிட்டி மற்றும் விஜர்சன ஊர்வல கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விழாக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இந்து முன்னணி தலைவர் நடராஜ், வக்கீல் சிவசங்கர், பா.ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர் வாசுதேவன், கமிட்டி பொருளாளர் மயூரப்பிரியன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

31 இடங்களில் விநாயகர் சிலை

கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 25-ந்தேதி பெரம்பலூர் நகரில் செல்வவிநாயகர் கோவில், எளம்பலூர் நடேசபிள்ளை காலனி, பிரம்மபுரீஸ்வரர் கோவில், சஞ்சீவிராயன் கோவில் தேரடி, எடத்தெரு மகாமாரியம்மன்கோவில் உள்ளிட்ட 31 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது.

பெரம்பலூரில் விநாயகர் விஜர்சன ஊர்வலம் 27-ந்தேதி காந்தி சிலை அருகே உள்ள செல்வவிநாயகர் கோவிலில் இருந்து தொடங்கி முக்கியமான 15 சாலைகள் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையை அடைந்து அங்கிருந்து சிலைகளை வேன்களில் திருச்சிக்கு எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் கரைப்பது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீஸ் நிர்வாகத்திற்கும் முழுஒத்துழைப்பு கொடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சேவாபாரதி மாவட்ட செயலாளர் சிவபாண்டியன் நன்றி கூறினார். 

Related Tags :
Next Story