மாவட்ட செய்திகள்

திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Bank staff demonstrated

திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் டவுன்ஹால் அருகில் உள்ள ஆந்திரா வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்,

ஆர்ப்பாட்டத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகள் வங்கியையும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், பொதுத்துறை வங்கிகளையும், அரசு வங்கிகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் உமாநாத், நடராஜன், விஜய் ஆனந்த், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.