செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு


செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 6 Sep 2017 10:13 PM GMT (Updated: 2017-09-07T03:43:12+05:30)

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு அருகே செண்பகத்தோப்பு அணை உள்ளது. இந்த அணையில் மதகுகள் சரிவர அமைக்கப்படாததால் அணையில் நீரை சேமித்து வைக்க முடியவில்லை.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு அருகே செண்பகத்தோப்பு அணை உள்ளது. இந்த அணையில் மதகுகள் சரிவர அமைக்கப்படாததால் அணையில் நீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் மழைநீர் வெளியேறி வீணாக செல்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி நேற்று அணையை ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில், இந்த அணையின் மதகுகள் சரிவர அமைக்கப்படாததால் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அணையை மறுசீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மதகுகள் உள்பட அணையை சீரமைக்க அரசு ரூ.9 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. டெண்டர் இன்னும் விடப்படவில்லை. விரைவில் டெண்டர் விடப்பட்டு அணையை சீரமைக்கும் பணிகள் 4 மாதத்திற்குள் முடிக்கப்படும். டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

ஆய்வு முடிந்து செல்லும்போது மலைக்கிராம மக்கள் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் இங்கு ஏன்? அமர்ந்துள்ளீர்கள் என்று கலெக்டர் கேட்டார். எங்கள் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

ஆய்வின் போது போளூர் தாசில்தார் புவனேஸ்வரி, சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் அருண்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்நாதன், மகாலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.Next Story