மாவட்ட செய்திகள்

மாணவி பாலியல் கொடுமை வழக்கில் வாலிபர் - 2 பெண்கள் கைது + "||" + 2 women arrested for sexually abusing student

மாணவி பாலியல் கொடுமை வழக்கில் வாலிபர் - 2 பெண்கள் கைது

மாணவி பாலியல் கொடுமை வழக்கில் வாலிபர் - 2 பெண்கள் கைது
சென்னையை சேர்ந்த மாணவியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் ஒரு வாலிபரும், அவரது கள்ளக்காதலி உள்பட 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
அம்பத்தூர்,

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 வயதான 9-ம் வகுப்பு மாணவி சில நாட்களுக்கு முன்பு மாயமானாள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உறவினர் சித்ரா (30) என்பவரின் வீட்டில் தங்கியிருந்த அவள் சில நாட்களில் வீடு திரும்பினாள்.

அப்போது தன்னை சித்ரா, அவரது உறவினர் சுரேஷ் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர், அவரது உதவியாளர் ஆகியோர் பாலியல் கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் இதுகுறித்து சென்னை திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர்.

தீக்குளிக்க முயற்சி

அதன்பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசு டாக்டர் மற்றும் அவரது உதவியாளருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது தெரிந்ததும் போலீசார் அவர்களை விடுவித்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த சித்ரா தனது 2 மகன்களுடன் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றபோது ஆரணி மகளிர் போலீசில் சிக்கினார். இந்த சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை என்று சித்ரா கூறினாலும் ஆரணி போலீசார், வழக்கை விசாரித்துவரும் திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் சித்ராவை ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

அதேபோல சித்ராவின் உறவினர் சுரேஷ் (36) ஆரணி போலீசில் சரண் அடைந்தார். சித்ராவையும், சுரேஷையும் திருமங்கலம் போலீசார் சென்னை அழைத்துவந்து விசாரித்தனர். சுரேஷ் கொடுத்த தகவலின்பேரில் அவரது கள்ளக்காதலியான கோடீஸ்வரி என்பவரையும் போலீசார் பிடித்தனர்.

சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாக சுரேஷ், சித்ரா, கோடீஸ்வரி ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.