திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 12:28 AM GMT (Updated: 2017-10-11T05:58:43+05:30)

பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் அமித் மோசடியில் ஈடுபட்டதாக கூறி திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் அமித் மோசடியில் ஈடுபட்டதாக கூறி திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார்.

 திருவள்ளூர் நகர தலைவர் மோகன்தாஸ், மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தன், அருள்மொழி, நாகராஜ், வெங்கடேஷ், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகி அத்திப்பட்டு துரைக்கண்ணு, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் கொப்பூர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story