டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை பலி


டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை பலி
x
தினத்தந்தி 11 Oct 2017 12:43 AM GMT (Updated: 2017-10-11T06:13:07+05:30)

ராசிபுரம் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்ஜினீயர் மாணிக்கம். தொழில்அதிபரான இவர் ராசிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் என்ஜினீயர் சிபிசக்கரவர்த்தி. இவருடைய மனைவி சுகஜனனி.

இவர்களுடைய மகள் சிஜா செல்லி (11 மாதம்). இவள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.

பரிதாப சாவு

குழந்தை சிஜா செல்லிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிஜா செல்லி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள்.

டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story