டெங்கு காய்ச்சலை தடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் அன்பரசு, ஜான்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மாவட்ட பொருளாளர் ரோக்கஸ்வளவன், துணை செயலாளர் தமிழ்வளவன், திண்டுக்கல் தொகுதி செயலாளர் மைதீன்பாவா உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், டெங்கு காய்ச்சலை தடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story