பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்
x
தினத்தந்தி 27 Oct 2017 11:15 PM GMT (Updated: 2017-10-28T01:04:53+05:30)

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

*சென்னை மூர்மார்க்கெட்-ஆவடி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்களிலும் இயக்கப்பட இருந்த சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சிறப்பு மின்சார ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*அதேபோல், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடை மேம்பால பணி நடைபெற இருப்பதால் இன்றும், நாளையும் சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கமாக இரவு நேரங்களில் இயக்கப்பட இருந்த சில மின்சார ரெயில் சேவைகள் பகுதி தூரமாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கு பதிலாக சில சிறப்பு மின்சார ரெயில்கள் இன்று மற்றும் நாளை இயக்கப்படவுள்ளன.

தாமதம்

*தஞ்சாவூர்-திருச்சி இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை தாம்பரம்-செங்கோட்டை இடையே வருகின்ற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் காலை 7 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும்.

*அதேபோல், வருகிற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் செங்கோட்டை-தாம்பரம் இடையே காலை 6 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில்கள் 2 மணி நேரம் தாமதமாக காலை 8 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story