குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு


குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 28 Oct 2017 10:30 PM GMT (Updated: 2017-10-29T01:56:14+05:30)

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு ராமாபுரம் அடுத்த செட்டிவாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு ராமாபுரம் அடுத்த செட்டிவாரிப்பள்ளி கிராமம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது22). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் ஏற்கனவே 3 முறை இதே போல் கள்ளச்சாராயத்தை கடத்தி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தொடர்ந்து கள்ளச்சாராயத்தை கடத்தி விற்பனை செய்து வரும் சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டா சுரேஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை போலீசார் புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள். 

Next Story