சட்டையில் பதியும் ‘பாஸ்கோடுகள்’


சட்டையில் பதியும் ‘பாஸ்கோடுகள்’
x
தினத்தந்தி 13 Nov 2017 1:53 PM IST (Updated: 13 Nov 2017 1:52 PM IST)
t-max-icont-min-icon

இப்போதெல்லாம் குறியீட்டுச் சொற்களான பாஸ்வேர்டுகள்தான், கணினி உள்ளிட்ட சாதனங்கள், அப்ளிகேசன்களில் நுழைய உதவுகிறது.

பொருட்களில் பதிக்கப்படும் பார்கோடுகளைப்போல, சட்டையில் காந்தவியல் அடிப்படையில் பாஸ்கோடுகளை வரைந்து கொள்ளும் நுட்பத்தை கண்டு பிடித்திருக்கிறது வாஷிங்டன் பல்கலைக்கழகம். இது எலக்ட்ரானிக் சார்ந்த குறியீடு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படுவதுபோல, அவர்களின் உடையில் இந்த பாஸ்கோடுகளை பொறித்துக் கொண்டால், அவர்கள் உள்ளே நுழைவதையும், வெளியேறுவதையும் எளிமையாக அனுமதிக்கலாம்.

இந்த பாஸ்கோடுகளை படித்து அறிந்து கொள்ளும் சிறிய சாதனத்தை கதவில் பொருத்திவிட்டால் போதும். நாம் அனுமதிக்கும் நபர்கள் மட்டும் உள்ளே வந்து செல்லலாம். வாஷிங்மெஷினில் துவைத்தாலும், இஸ்திரி போடும் போதும் இந்த பாஸ்கோடுகள் பாதிக்கப்படுவதில்லை. 160 டிகிரி வெப்பநிலை வரை தாங்கக்கூடியது. “காந்த இழை என்பதும் ஹார்டுடிஸ்க் போலத்தான். இதில் தகவல்களை பதியவைக்கவும், சேமிக்கவும் முடியும். எனவே எதிர்காலத்தில் உடைகள்கூட டேட்டா சேமிப்புக் கலனாக மாறக்கூடும்” என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

Next Story