மாவட்ட செய்திகள்

புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதா..? இல்லை கூடியிருக்கிறதா..? + "||" + Has book reading been reduced?

புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதா..? இல்லை கூடியிருக்கிறதா..?

புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதா..? இல்லை கூடியிருக்கிறதா..?
கல்வி அறிவை போதிக்கும் பள்ளி ஆசானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவை புத்தகங்கள்.
ம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் என்பார்கள். இந்த நண்பனை உயிர் நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள், புகழ் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள்; பலர் சாதனையாளராகவும், சிலர் புரட்சியாளராகவும் மாறியிருக்கிறார்கள். ‘அடிமைகளின் சூரியன்’ எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்கள் படித்தே உயர்ந்தவர். அவர் தச்சுத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, புத்தக படிப்பினால் தேசம் புகழத் திகழ்ந்தார்..! ‘ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு’ என்ற புத்தகத்தை இரவல் வாங்கிப் படித்தவருக்கு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகவேண்டும் என்ற ஆசை ஏற்பட, அதுவே அமெரிக்க வரலாறாக மாறியது. லண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், அரிய நூல்களைப் படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ், உலகின் பொதுவுடைமைத் தந்தையாக உயர்ந்தார்.

“காஞ்சீபுரத்தில் இருந்து, முதுகலைப் பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கிச் சென்றான்; முடிவில் தமிழகத்தின் முதல்வராகத் திரும்பினான்” என்று பேரறிஞர் அண்ணாவைப் புகழ்வார்கள்..! அவர், சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்களை படித்தவர். நூலகம் திறக்கும்பொழுது உள்ளே நுழைபவர், இரவில் அது மூடப்படும்பொழுது தான் வெளியே வருவாராம். அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டபோதும், அவர் அரிதான நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அந்த நூல் முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையையே ஒரு நாள் ஒத்திவைக்கும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது, வாசிப்பின் மேல் வைத்த அவரின் நேசிப்பை உணர்த்துகிறது..!

இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, “நான் மறைந்தபின் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம்; என் மடி மீது புத்தகங்களைப் பரப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார்!

இந்தியாவின் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், மாஸ்கோ நகருக்குச் சென்ற பொழுது, தங்கும் விடுதியில் தனக்கு இரண்டு அறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். முதலில் அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரின் விருப்பப்படி இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டன. அவர் அங்கு சென்ற பின்னர்தான் புரிந்தது. அவர் தங்குவதற்கு ஓர் அறை; படிப்பதற்காக எடுத்துச் சென்ற புத்தகங்களை வைப்பதற்கு ஓர் அறை..! இதுவும் வாசிப்பின் மீதான வரலாற்றுச் செய்திஅல்லவா?.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து விதமான நூல்களையும் படிக்க ஆர்வம் காட்டியவர். புத்தக வாசிப்பு ஆர்வத்தின் தாக்கமாக எழுத்தாளராகவும் முத்திரை பதித்தவர். இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். ஒருமுறை கலாம் பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தபோது ஒரு மாணவி “உங்களுடைய எதிரி யார்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் “வறுமைதான் நம் எதிரி” என்றார். அதன் தாக்கம் புத்தகம் எழுதும் ஆர்வத்தை தூண்டிவிட ‘இக்னைடெட் மைண்ட்ஸ்’ என்ற நூலை எழுதினார்.

அப்துல்கலாம் குடியரசு தலைவராக இருந்த காலகட்டத்தில் டெல்லியில் வசித்த இல்லத்தில், அவர் பயன்படுத்திய பொருட்கள் கண்டெய்னரில் ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அவை என்ன தெரியுமா? 1000-க்கும் மேற்பட்ட புத்த கங்கள். நாட்டின் உயரிய பதவியான குடியரசு தலைவர் மகுடத்தை சூடியபோதும் அவர் நேசித்ததும், வாசித்ததும் புத்தகங்களைத்தான்.

கல்வி அறிவை போதிக்கும் பள்ளி ஆசானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவை புத்தகங்கள். வாழ்க்கையில் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு மட்டும் புத்தகங்களாக பதிவாகவில்லை. அவர்கள் அந்த நிலையை எட்ட கைகொடுத்தவை புத்தகங்களாகவே இருக்கின்றன.

இவ்வளவு சிறப்பு மிக்க புத்தகங்கள் சமீபகாலமாக ஒதுக்கப்படுவதாக ஒரு சர்வே கூறுகிறது. ஏனெனில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பே குறைந்துவிட்டதாக மற்றொரு சர்வே தெரிவிக்கிறது. விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் சொடுக்கும் கணினி உலகம், புத்தகங் களையும் கையடக்கமாக கொண்டுவந்துவிட்டதால் இப்போது அதில்தான் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படு கிறது.

அறிவையும், சிந்தனையையும் வளர்க்கும் புத்த கங்களை வாசிக்கும் பழக்கத்தை இன்றைய தலைமுறையினரிடம் அதிகப்படுத்தும் நோக்கில் புத்தக கண்காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. தற்போது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 41-வது ‘சென்னை புத்தக கண்காட்சி’ பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. அங்கு சாரை சாரையாக படையெடுக்கும் மக்கள் கூட்டம், புத்த கங்கள் மீதான மோகம் தொடர்ந்து கொண்டுதான் இருப்பதை உறுதி செய்கிறது. முயற்சி...

“புத்தக வாசிப்பாளர்களை அதிகப்படுத்த பல இடங்களில் புத்தகக் கண்காட்சிகளை நடத்து கிறோம். தற்போது சென்னையில் நடைபெறும் புத்தகக்கண்காட்சியில், பார்வையாளர்களை கவர்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதில் வழிகாட்டும் ரோபோவும் ஒன்று. இதனிடம் ஆங்கிலத்தில் வழி கேட்கலாம். பதிப்பகத்தின் பெயரை சொன்னால் போதும், இந்த குட்டி ரோபோ அந்த பதிப்பகத்தின் புத்தக ஸ்டால்களுக்கு நம்மை அழைத்து சென்றுவிடும்.

மேலும் பார்வையற்றவர்களுக்காகவே பிரத்தி யேக புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் முழுக்க முழுக்க பிரைய்லி வகை புத்தகங்களே இடம்பிடித்திருக்கின்றன. மேலும் இலவச மருத்துவ முகாம்களுக்கும், எழுத்தாளர்கள்-பேச்சாளர்களின் அனுபவ உரைகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். கடந்த ஆண்டு 10 லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம். புத்தக விற்பனையை விட, புத்தகங்கள் விதைக்கும் நல்ல கருத்தில் தான் பபாசி அமைப்பின் வெற்றி அடங்கியிருக்கிறது”

- வயிரவன், பபாசி அமைப்பின் தலைவர். 

திருவினையாக்கும்...“நாம் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு வகையில் நம்மை மாற்றியமைக்கின்றது. திருக் குறள் தொடங்கி நவீன இலக் கியம் வரை நாம் நேசித்து வாசித்து மகிழும் புத்தகங்கள் நம் சிந்தனையை கட்டமைத்துக்கொண்டேயிருக்கின்றன. என் வாழ்வை மாற்றிய பல புத்தகங்கள் இருந்தாலும் பணியை அணுகும் விதத்தை வரையறுத்தது கலீப் கிப்ரான் எழுதிய ‘தீர்க்கதரிசி’ என்கிற நூல். அதில் பணி செய்யும்போது அதை நாம் விரும்புகிறவர்களுக்கு போய்ச் சேருவதைப்போல எண்ணிக்கொண்டு செய்ய வேண்டும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. நாம் விரும்பிச் செய்யாவிட்டால் சுட்ட ரொட்டிகள் புளித்துப்போகும். விரும்பாமல் பணி செய்வதற்குப் பதிலாக ஆலயங்கள் முன் அமர்ந்து யாசிக்கலாம் என அவர் கூறியிருக்கிறார். எந்தப் பணியைச் செய்தாலும் அந்தக் கருத்துகளை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு செய்கிறேன். அந்த அணுகுமுறை என்னை ஆனந்தமயமாக மாற்றியிருக்கிறது”

-இறையன்பு, ஐ.ஏ.எஸ். 

புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது -ராஜா


“புத்தகக் கண்காட்சி நடத்தப் படுவதும், அதில் பொதுமக்கள் குடும்பங்களோடு கலந்து கொள்வதும் வரவேற்க வேண்டிய அம்சங்கள் என்றாலும், கண்காட்சிக்கு வருபவர்களில் எத்தனை பேர் புத்தகங்களை வாங்கி சென்று தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பு என்ற பழக்கம், வெகுவாக குறைந்து விட்டது. தேர்வு, கல்லூரி ப்ராஜெக்டுகள், போட்டித் தேர்வுகள் என... பரபரப்பான வாழ்க்கையில் புத்தக வாசிப்பு மறக்கடிக்கப்படுகிறது. பள்ளிக்கூட நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் இருக்கிறது என்ற அடிப்படை தகவல் கூட மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஏன்...? மாதத்திற்கு சிலமுறை வழங்கப்படும் நூலக வகுப்புகள் இன்றும் கடைப்பிடிக்கப்படு கிறதா..? என்ற கேள்வியும் எழுகிறது. பாடப்புத்தகத்தை மட்டும் படித்தால் போதும், வாழ்க்கையை வென்றுவிடலாம் என்ற மனநிலைக்கு மாணவர்கள் வந்துவிட்டனர். இத்தகைய மனநிலையை மாற்றுவது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. ஒருசில பெற்றோர்கள் எந்த இடத்தில் புத்தகக்கண்காட்சி நடந்தாலும், குழந்தைகளை அங்கு அழைத்து சென்றுவிடுவார் கள். அங்கு போடப்பட்டிருக்கும் புத்தக ஸ்டால்களை சுற்றிப்பார்த்துவிட்டு... அவர் களுக்கு தெரிந்த புத்தகங்களை மட்டும், கடமைக்கு வாங்கி வருகிறார்கள். அவை பெரும்பாலும் அக்கம், பக்கத்தில் கேள்விப்பட்ட புத்தகங்களாகவே இருக்கும். குறிப்பாக மருத்துவ குறிப்புகள், பரபரப்பாக பேசப்படும் புத்தகங்கள், அழகு குறிப்புகள், ஜோதிடம் சார்ந்த புத்தகங்கள்... என மற்றவர்கள் கொடுத்த சான்றிதழ்களின் அடிப்படையில் தான் புத்தகங்களை வாங்குகிறார்கள். இந்த அடிப்படையே தவறானது. புத்தக திருவிழாக்கள் என்பது பொருள் வாங்கும் இடம் அல்ல. பல கருத்துகளையும், பல சரித்திரங்களையும் புரட்டி பார்க்கும் இடம். புத்தகத்தை நேசிப்பவராக இருந்தால்... ஒரு ஸ்டாலை கடந்து செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். ஒருசில புத்தக புழுக்களுக்கு நாள் கணக்கில் தேவைப்படும். இப்படி இருக்கையில் குழந்தைகளையும், பள்ளி மாணவர்களையும் சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதை போன்று புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து செல்கிறோமோ..? என்ற சந்தேகமும் எழுகிறது. இத்தகைய புத்தக திணிப்பு, புத்தக வாசிப்பையே குறைத்துவிடும். ஒருசில பள்ளி மாணவர்கள் புத்தகக்கண்காட்சியையும், புத்தக வாசிப்பையும் கட்டாய திணிப்பாகவே பார்க்கிறார்கள். அதனால் மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் புத்தகம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லா ஊர்களிலும் ‘புத்தகத்திருவிழா’ என்ற பெயரில் புத்தகக்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதை வேடிக்கை பார்க்கிறோமா...? இல்லை அறிவை வளர்த்து கொள்வதற்காக நல்ல புத்தகங்களை தேடி, வாங்க போகிறோமா..? என்ற சந்தேகத்துடன் என்னுடைய கருத்தை நிறைவு செய்கிறேன்”

“புத்தகக் கண்காட்சி நடத்தப் படுவதும், அதில் பொதுமக்கள் குடும்பங்களோடு கலந்து கொள்வதும் வரவேற்க வேண்டிய அம்சங்கள் என்றாலும், கண்காட்சிக்கு வருபவர்களில் எத்தனை பேர் புத்தகங்களை வாங்கி சென்று தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பு என்ற பழக்கம், வெகுவாக குறைந்து விட்டது. தேர்வு, கல்லூரி ப்ராஜெக்டுகள், போட்டித் தேர்வுகள் என... பரபரப்பான வாழ்க்கையில் புத்தக வாசிப்பு மறக்கடிக்கப்படுகிறது. பள்ளிக்கூட நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் இருக்கிறது என்ற அடிப்படை தகவல் கூட மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஏன்...? மாதத்திற்கு சிலமுறை வழங்கப்படும் நூலக வகுப்புகள் இன்றும் கடைப்பிடிக்கப்படு கிறதா..? என்ற கேள்வியும் எழுகிறது.

பாடப்புத்தகத்தை மட்டும் படித்தால் போதும், வாழ்க்கையை வென்றுவிடலாம் என்ற மனநிலைக்கு மாணவர்கள் வந்துவிட்டனர். இத்தகைய மனநிலையை மாற்றுவது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

ஒருசில பெற்றோர்கள் எந்த இடத்தில் புத்தகக்கண்காட்சி நடந்தாலும், குழந்தைகளை அங்கு அழைத்து சென்றுவிடுவார் கள். அங்கு போடப்பட்டிருக்கும் புத்தக ஸ்டால்களை சுற்றிப்பார்த்துவிட்டு... அவர் களுக்கு தெரிந்த புத்தகங்களை மட்டும், கடமைக்கு வாங்கி வருகிறார்கள். அவை பெரும்பாலும் அக்கம், பக்கத்தில் கேள்விப்பட்ட புத்தகங்களாகவே இருக்கும். குறிப்பாக மருத்துவ குறிப்புகள், பரபரப்பாக பேசப்படும் புத்தகங்கள், அழகு குறிப்புகள், ஜோதிடம் சார்ந்த புத்தகங்கள்... என மற்றவர்கள் கொடுத்த சான்றிதழ்களின் அடிப்படையில் தான் புத்தகங்களை வாங்குகிறார்கள். இந்த அடிப்படையே தவறானது. புத்தக திருவிழாக்கள் என்பது பொருள் வாங்கும் இடம் அல்ல. பல கருத்துகளையும், பல சரித்திரங்களையும் புரட்டி பார்க்கும் இடம்.

புத்தகத்தை நேசிப்பவராக இருந்தால்... ஒரு ஸ்டாலை கடந்து செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். ஒருசில புத்தக புழுக்களுக்கு நாள் கணக்கில் தேவைப்படும். இப்படி இருக்கையில் குழந்தைகளையும், பள்ளி மாணவர்களையும் சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதை போன்று புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து செல்கிறோமோ..? என்ற சந்தேகமும் எழுகிறது. இத்தகைய புத்தக திணிப்பு, புத்தக வாசிப்பையே குறைத்துவிடும். ஒருசில பள்ளி மாணவர்கள் புத்தகக்கண்காட்சியையும், புத்தக வாசிப்பையும் கட்டாய திணிப்பாகவே பார்க்கிறார்கள். அதனால் மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் புத்தகம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

எல்லா ஊர்களிலும் ‘புத்தகத்திருவிழா’ என்ற பெயரில் புத்தகக்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதை வேடிக்கை பார்க்கிறோமா...? இல்லை அறிவை வளர்த்து கொள்வதற்காக நல்ல புத்தகங்களை தேடி, வாங்க போகிறோமா..? என்ற சந்தேகத்துடன் என்னுடைய கருத்தை நிறைவு செய்கிறேன்” 

புத்தகம் வாசிப்பு அதிகரித்திருக்கிறது..! -பாரதி பாஸ்கர்


“நண்பர் ராஜாவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்றைய இளைஞர்கள் ‘ஸ்மார்ட்’ ஆனவர்கள். நாம் 500 பக்கம், ஆயிரம் பக்க புத்தகங்களை புரட்டி படித்தோம் என்றால், அவர்கள் எளிமையாக தொடுதிரையில் தடவிக்கொண்டே படித்துவிடுகிறார்கள். ‘கிண்டில்’ டேப்லெட்டில் இல்லாத புத்தகங்களே இல்லையெனலாம். அந்தளவிற்கு எல்லாவிதமான புத்தகங்களும் டிஜிட்டல் புத்தகங்களாக கிடைக்கின்றன. அமேசானில் அதிகம் விற்கப்படும் புத்தகங்களில் தமிழ் புத்தகங்களே முதலிடத்தை பிடித்திருக்கின்றன. இப்படி இருக்கையில் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது என்ற கருத்தை எப்படி நம்புவது..?

ஒருமுறை பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கு எனக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த மாணவன் “சகாயம் சந்தித்த சவால்கள்” என்ற புத்தகத்தை கேட்டான். அந்த புத்தகம், அந்த ஸ்டாலில் இல்லை. அதனால் அடுத்த ஸ்டாலுக்கு சென்று கேட்டான். அங்கும் இல்லை; உடனே அடுத்த ஸ்டாலுக்கு சென்றுவிட்டான்.

அந்த புத்தகத்தின் தன்மை, அதிலிருக்கும் சாரம்சங்கள் பற்றி அவனுக்கு தெரிந்திருக்காவிட்டால், அத்தகைய புத்தகங்களை எப்படி தேடி வாங்க முடிகிறது..?

இன்றைய தலைமுறை..., ஆன்லைனிலும், பத்திரிகைகளிலும் வெளிவரும் புத்தக விமர்சனங்களை படிக்கிறார்கள். அதை பேஸ்புக்கில் விசாரிக்கிறார்கள். புத்தகத்தில் இருக்கும் சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் “ஹாஷ்டாக்”-ல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அந்த புத்த கங்களை, புத்தக கண்காட்சியில் தேடிப் பிடித்து வாங்குகிறார்கள். இதனால் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமின்றி, புதுமையான தகவல்களோடு எழுதும் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களும் விற்பனையாகிறது.

அடுத்ததாக சமையல் புத்தகங்களை வாங்கி படித்து, அதன் மூலம் சமைத்த காலங்கள் மலையேறி விட்டது. ஏனெனில் இது டிஜிட்டல் உலகம். சுஜாதாவின் கதைகள் புத்தகமாக வெளிவருவதற்குள், அவரது பிளாக் ஸ்பாட்டில் டிஜிட்டல் கதையாக வந்துவிடுகிறது. இந்த டிஜிட்டல் டிரெண்டிங், புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதை போன்ற மாயபிம்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மையில் இளைய தலைமுறையினரிடம் தான் புத்தக வாசிப்பு அதிகமாக உள்ளது. முகநூலில் மீம்ஸ்களை தேடும் இளைஞர்களைவிட, ‘நியூஸ் பீட்’களை தேடி படிக்கும் இளைஞர்கள் தான் அதிகமாக உள்ளனர். மேலும் இணையத்தில் இருக்கும் தமிழ் பிளாக் ஸ்பாட்டுகளை மொய்கிறார்கள்.

குழந்தைகளையும், மாணவர்களையும் கட்டாயப்படுத்தி புத்தகக்கண்காட்சிக்கு அழைத்து செல்வதாக ராஜா கூறுகிறார். நல்ல பழக்கத்தை கட்டாயத்தின் மூலமாகவே ஊட்ட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அத்தகைய கட்டாயத்தில் தவறே இல்லை” என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார். 

எதை வாசிக்கிறோம்..? -நடுவர் சாலமன் பாப்பையா


இன்றைய காலகட்டத்திற்கு தேவையான விவாத களம் இது. சுவர் போஸ்டர்கள், முகநூல் பதிவுகள், சினிமா விமர்சனங்கள், செய்திதாள்கள், பொழுதுபோக்கு புத்தகங்கள்... இதை வாசிப்பதுதான் புத்தக வாசிப்பு என்றால், இன்றைய இளைஞர்களிடம் இத்தகைய பழக்கம் அதிகமாகவே இருக் கிறது. இன்றைய இளைஞர்கள் வாசிக் கிறார்கள். ஆனால் எதை வாசிக்கிறார்கள்..? என்ற கேள்வியில் தான் இந்த விவாதத்திற்கான முடிவு இருக் கிறது.

கண்ணில் தென்படுவதையும், பார்வேர்ட் குறுந்தகவலையும் படிப்பது மட்டுமே, வாசிப்பு பழக்கமாகாது. நமக்கு தேவையான கருத்து, எந்த புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது என்பதை தேடி படிப்பதுதான் முறையான புத்தக வாசிப்பு. இன்றைய தலைமுறையினர் பழமையான தமிழ் நூல்களையும், கதைகளையும் வாசிப்பதே இல்லை. படைப்பு இலக்கனங்களை எத்தனை பேர் வாசித் திருக்கிறார்கள்..? என்ற கேள்வியே இந்த விவாதத்திற்கான விடையை சொல்லிவிடும்.

எழுத்து பழக்கமும், புத்தக வாசிப்பு பழக்கமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. எழுத்தை நேசித்தால், புத்தக வாசிப்பும் தானாக வந்துவிடும். இன்றைய இளைஞர்களின் பேச்சு நடையை கவனித்தால், அதில் ஆங்கிலம் வெளிப்படும். ஒருசில வார்த்தைகளை ஆங்கிலத்தில் தான் பேச கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் முறையான புத்தக வாசிப்பு இருந்தால், இதுபோன்ற கலவை சொற்களை தவிர்த்திருக்கலாம். தமிழ் பற்றிய அக்கறையே நம்மிடம் குறைந்து கொண்டிருக்க, முறையான புத்தக வாசிப்பு மட்டும் எப்படி அதிகரிக்கும்..? ஒருவேளை..., புத்தகங்களின் விலை ஏற்றமும் புத்தக வாசிப்பை குறைத்து வருகிறதோ..? என்ற சந்தேகம் எழுகிறது.

புத்தகம் படிக்கும் ஆசை அதிகமானவர்களிடம் இருந்தாலும், ஆனால் அதை செயல்படுத்தும் ஆற்றல் சிலரிடமே இருக்கிறது. புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது... என்ற மறுக்கமுடியாத உண்மையுடன் இந்த கருத்து யுத்தத்தை நிறைவு செய்கிறேன்”.