நாமகிரிபேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை


நாமகிரிபேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Jan 2018 4:00 AM IST (Updated: 16 Jan 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிபேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள கல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 47), போலீஸ் ஏட்டு. பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை ஓட்டி வந்த இவர் நாமகிரிபேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 13-ந் தேதி வழக்கம்போல் பணி முடிந்தவுடன் வீட்டுக்கு வந்துவிட்டார். அன்று இரவு அவர் வீட்டில் உள்ள மின் விசிறியில் நைலான் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன் தற்கொலைக்கு காரணம் மன உளைச்சலா? அல்லது குடும்ப பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட போலீஸ் ஏட்டு மாதவனும் அவரது மனைவி கலைச்செல்வியும் (40)காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு ரஞ்சித்குமார் (23), சுஜய்குமார் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர். 

Next Story