மாவட்ட செய்திகள்

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா + "||" + Pongal Festival at Alakurichi Temple

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டதும், கிறிஸ்தவ ஆலயங்களில் பழமைவாய்ந்ததும், தமிழ்நாடு சுற்றுலாதலங்களில் ஒன்றானதுமான அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தமிழ் அன்னையாய் வடிவமைக்கப்பட்டுள்ள அன்னைக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.


அதேபோல், இந்தாண்டும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆலயத்தின் முன்புள்ள வளாகத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவுக்கு பங்கு தந்தை சுவைக்கின் தலைமை தாங்கினார். அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். உதவி பங்குதந்தை திமோத்தி வரவேற்றார்.

திருப்பலி

விழாவில் அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன் பொங்கல் பானையில், பச்சரிசியையும் பாலையும் ஊற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து இருங்கலூர் பங்கு தந்தை அகஸ்டின் தலைமையில், பொங்கல் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பொங்கல் விழாவில் திருமானூர் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வந்திருந்து அன்னையின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடி சென்றனர்.