ஆந்திராவுக்கு கடத்துவதற்காக கும்மிடிப்பூண்டியில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஆந்திராவுக்கு கடத்துவதற்காக கும்மிடிப்பூண்டியில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:30 PM GMT (Updated: 17 Jan 2018 10:12 PM GMT)

ஆந்திராவுக்கு கடத்துவதற்காக கும்மிடிப்பூண்டியில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள முஸ்லீம் காலனி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி மனை ஒன்றில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, அங்கிருந்து ஆந்திராவுக்கு சிலர் வாகனங்களில் கடத்தி வருவதாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து தாசில்தார் ராஜகோபால் தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி மதியழகன், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அப்போது அங்கு தலா 50 கிலோ எடைகொண்ட 20 மூட்டைகளில் மொத்தம் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்? அவை கும்மிடிப்பூண்டியில் உள்ள எந்தெந்த ரேஷன் கடைகளில் இருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story