காஞ்சீபுரத்தில் ரவுடி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது


காஞ்சீபுரத்தில் ரவுடி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 17 Jan 2018 10:12 PM GMT (Updated: 2018-01-18T03:42:39+05:30)

காஞ்சீபுரத்தில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் நிவாஸ் என்கிற நிவாஸ்கான் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மாலை காஞ்சீபுரம் திருக்காலிமேடு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நிவாஸ்கானை மர்மநபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காஞ்சீபுரத்தில் 2 ரவுடி கோஷ்டிகள் செயல்பட்டு வருகிறது. எனவே பழிக்குப்பழியாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் ரவுடி நிவாஸ்கானை கொலை செய்ததாக காஞ்சீபுரம் திருக்காலிமேடு மாமல்லன்நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (27), மோகன் என்கிற வெள்ளை மோகன் (28), தளபதி என்கிற செல்லா (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story