பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரவேண்டும், லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து எம்.ஆர்.குமாரசாமி, யுவராஜ் கூறியதாவது:-
பெட்ரோல்-டீசல் விலை யை தினந்தோறும் உயர்த்துவதை மாற்றி 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்ய வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து நாடுமுழுவதும் ஒரே விலை என்ற முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே லாரி தொழில் வளர்ச்சி அடைய மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story