மாவட்ட செய்திகள்

போக்குவரத்து துறையில் வேலை + "||" + Work in the transport industry

போக்குவரத்து துறையில் வேலை

போக்குவரத்து துறையில் வேலை
தமிழக போக்குவரத்து துறையின் துணை நிறுவனத்திற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 113 இடங்களும், ஆய்வக உதவியாளர் பணிக்கு 56 இடங்களும் உள்ளன.
மிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனத்திற்கு வாகன ஆய்வாளர் (கிரேடு2), மற்றும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 113 இடங்களும், ஆய்வக உதவியாளர் பணிக்கு 56 இடங்களும் உள்ளன. 

வாகன ஆய்வாளர் பணிக்கு 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 1–7–2018–ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். விலக்கு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. 

10–ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் வாகன ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 25–3–2018–ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். 13–3–2018–ந் தேதி ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். 

மற்றொரு அறிவிப்பின்படி லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. 

விண்ணப்பதாரர்கள் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், உயிரியல் போன்ற அறிவியல் பாடங்கள் உள்ளடக்கிய பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 21–2–2018–ந் தேதியாகும். 

விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்.   tnpsc.gov.in/  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.