வைரல் வீடியோ


வைரல் வீடியோ
x
தினத்தந்தி 23 Feb 2018 4:45 AM IST (Updated: 22 Feb 2018 1:31 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஷாய் மிட்செல், யூ-டியூப் சமூக வலைத்தளத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற பந்தயம் கட்டினார்.

‘பிரிட்டி லையர்’ டி.வி. தொடர்களின் மூலம் பிரபலமான நடிகை ஷாய் மிட்செல், சமீபத்தில் அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு தன்னுடைய உதவியாளர் ஷாமியுடன் ஊர் சுற்றியவர், ஒரு பந்தயம் கட்டியிருக்கிறார். ‘யூ-டியூப் சமூக வலைத்தளத்தில் 3 மில்லியன் பார்வையாளர் களைப் பெறுவது’ என்பதே அந்த பந்தயம். இதற்காக நடிகை ஷாய் மிட்செல் என்ன செய்தார் தெரியுமா?, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘யூனிகார்ன்’ குதிரை முகமூடியுடன் அரை நிர்வாணமாக ஓடியிருக்கிறார். அதை ஷாமி வீடியோ எடுத்து, யூ-டியூபில் வெளியிட, 3 நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. 

Next Story