மாவட்ட செய்திகள்

வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் + "||" + Van Accident 16 people were injured

வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
பாளையங்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை,

நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ராமனூர் பகுதியை சேர்ந்த சிலர் நேற்று காலை ஒரு வேனில் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி சுடலை ஆண்டவர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். வேனை ஊத்துமலையை சேர்ந்த கனகராஜ் (வயது 24) என்பவர் ஓட்டினார்.


நேற்று காலை இந்த வேன் பாளையங்கோட்டையை கடந்து பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த அன்னமுத்து (52), பொன்னுதாய் (50), ஜெயந்தி (24), செல்வி (30), சுரேஷ் (25), சொர்ணம் (40), முத்துலட்சுமி (24), ஸ்ரீரெங்கன் (59), புஷ்பம் (49), பொன்னுமாரி (75), ரேணுகா (23), ஜெனிட்டா (27), பெரியசாமி (53), மாதவன் (11), சுரேஷ் (22) மற்றும் 3 வயது குழந்தை ஜெபாஸ் ஆகிய 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.