நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2018 3:45 AM IST (Updated: 26 Feb 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் புள்ளவராயன்குடிகாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். செட்டிசத்திரம் என்ற இடத்தில் வந்தபோது முத்தன் (80) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயக்குமார் வந்த மோட்டார்சைக்கிள் முத்தன் மீது மோதியது. இதில் முத்தன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார்சைக்கிளில் வந்த ஜெயக்குமாரும் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த ஜெயக்குமார் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்தன் மகன் செல்வராஜ், நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story