இந்திய சினிமாவை ஆட்சி செய்தவர், ஸ்ரீதேவி முதல்–மந்திரி பட்னாவிஸ் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு மராட்டிய முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.
மும்பை,
நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு மராட்டிய முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், ‘‘ஸ்ரீதேவி 4 வயதில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இந்தி மற்றும் பல்வேறு பிராந்திய மொழிப்படங்களில் நடித்து உள்ளார்.
‘சத்மா’, ‘சாந்தினி’, ‘லம்கே’, ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ போன்ற படங்களில் இடம்பெற்ற அவரது கதாபாத்திரம் நீண்ட காலத்திற்கு நினைவு கூரப்படும். தனது திறமையான நடிப்பால் இந்திய சினிமாவை ஆட்சி செய்து வந்த மிகச்சிறந்த நடிகையை நாடு இழந்து விட்டது’’ என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story