குடியிருப்பு பகுதிகளில் பூச்சிகள்: தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்


குடியிருப்பு பகுதிகளில் பூச்சிகள்: தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2018 4:45 AM IST (Updated: 5 May 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி பாரதிபுரத்தில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள்.

தர்மபுரி,

இந்த நிலையில் பாரதிபுரத்தில் உள்ள மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் பராமரிக்கப்பட்டு வரும் உணவு தானியங்களில் இருந்து வண்டுகள், சிறிய பூச்சிகள் உருவாகி அருகே உள்ள குடியிருப்புகளுக்கு பரவி வருவதாகவும், இதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் பாதிப்புள்ளாகி வருவதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் தர்மபுரி நுகர்பொருள் வாணிப கிடங்கின் அருகே உள்ள தெருக்களில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிடங்கில் பாதுகாக்கப்படும் உணவு தானியங்களில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகள் குடியிருப்பு பகுதிக்கு செல்லாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிடங்கின் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தி பூச்சிகள், வண்டுகள் உருவாவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story