மாவட்ட செய்திகள்

130 பேருக்கு நலத்திட்ட உதவிகள் + "||" + Welfare payments to 130 people

130 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

130 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகளை 130 பயனாளிகளுக்கு கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
அச்சரப்பாக்கம், 

காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் எலப்பாக்கம் கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது. இதில் மதுராந்தகம் தாசில்தார் ஏகாம்பரம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சார்லஸ் சசிகுமார், வட்டாரவளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சி) ஸ்டெல்லாபாய், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் தாட்கோ உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ரூ.18 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 130 பயனாளிகளுக்கு கலெக்டர் பொன்னையா வழங்கினார். நிகழ்ச்சியில் 250 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.