டோம்பிவிலியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.1½ லட்சம் தங்கச்சங்கிலி பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
டோம்பிவிலியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அம்பர்நாத்,
டோம்பிவிலியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தங்கச்சங்கிலி பறிப்பு
தானே மாவட்டம் டோம்பிவிலி சந்தாப்நாக்கா சாலையில் சம்பவத்தன்று சாயா பாட்டீல் என்ற பெண் தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது. அதில் இரண்டு பேர் இருந்தனர்.
மோட்டார்சைக்கிள் சாயா பாட்டீலை நெருங்கி வந்த போது, பின்னால் இருந்த ஆசாமி திடீரென அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தார்.
வலைவீச்சு
பின்னர் இருவரும் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர். சாயா பாட்டீல் பறிகொடுத்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் சம்பவம் குறித்து மான்பாடா போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலிைய பறித்து சென்ற ஆசாமிகள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story